அரசு பொதுத்தேர்வுகள் அமைதியாக நடைபெற அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டுகோள்

அரசு பொதுத்தேர்வுகள் அமைதியாக நடைபெற அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2022-04-27 18:45 GMT
பெரம்பலூர், 
பெரம்பலூர் மாவட்டத்தில் 2021-22-ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்விற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வுகள் மே மாதத்தில் நடைபெறவுள்ளது. தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மையங்களுக்கு உரிய பாதுகாப்போடும், தடையில்லா மின்சார வசதி, பஸ் வசதி செய்து தருமாறும், அமைதியான முறையில் தேர்வுகள் நடைபெற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும், என்றார்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஆர்.டி.ஓ. நிறைமதி, முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்