ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை அருகே உள்ள புளியங்கண்ணு கிராமத்தை சேர்ந்தவர் ராம்ராஜ் (வயது 28). இவர் பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். திடீரென அவர் வாந்தி எடுத்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.