தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரும் பணி

ஆற்காடு அருகே தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரும் பணியை வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனர் ஷ்வரன் குமார் ஜட்டா ஆய்வு செய்தார்.

Update: 2022-04-27 18:32 GMT
ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் மேலொப்பம் ஊராட்சியில் தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதனை வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குனர் ஷ்வரன் குமார் ஜட்டா வத் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

அப்போது இணை இயக்குனர் வேலாயுதம், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பூங்கொடி, உதவி பொறியாளர் ரவிக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்