தொல்லியல் அகழாய்வுகள் வரலாற்றுக்கு ஆதாரமாக திகழ்கின்றன-கருத்தரங்கில் தகவல்

தொல்லியல் அகழாய்வுகள் வரலாற்றுக்கு ஆதாரமாக திகழ்கின்றன-கருத்தரங்கில் தகவல்

Update: 2022-04-27 18:26 GMT
ராமநாதபுரம்
ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் தொல்லியல் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கினார். செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா முன்னிலை வகித்தார். இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவி டென்னிலா வரவேற்றார். கல்லூரி முதல்வர் அமானுல்லா ஹமீது வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறை தலைவர் ரா.பாக்கியராஜ் கருத்தரங்கத்தின் நோக்கம், தமிழ்த்துறை மாணவர்கள் தொல்லியலை அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி அறிமுக உரையில் கூறினார். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுரு கலந்து கொண்டு பேசியதாவது:- 
தொல்லியல் அகழாய்வுகள் நமது வரலாற்றுக்கு ஆதாரமாக விளங்குகின்றன. தமிழ்த்துறை மாணவர்கள் தமிழுடன் தொல்லியலையும், தங்கள் ஊரின் வரலாறையும் அறிந்து கொள்ள வேண்டும். தங்கள் ஊர்களில் உள்ள தொல்லியல் மேடுகள், கல்வெட்டுகளை மாணவர்கள் அடையாளம் கண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு பேசினார். மேலும், ராமநாதபுரம் மாவட்ட தொன்மைச் சிறப்புகளுக்கு ஆதாரமான சான்றுகள், ஊர்ப் பெயராய்வுகள், கல்வெட்டுகள் ஆகியவற்றை மேற்பரப்பாய்வுகளில் கிடைத்த பொருட்களை காட்டி விளக்கி பேசினார். இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவி நிவேதா சண்முகப்பிரியா நன்றி கூறினார். மாணவி சவுந்தர்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மேலும் செய்திகள்