ரசாயனம் தடவிய 120 கிலோ மீன்கள் பறிமுதல்
ரசாயனம் தடவிய 120 கிலோ மீன்கள் பறிமுதல்
சிவகங்கை
சிவகங்கையில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெறும். நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் மீன் விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீன்வள ஆய்வாளர் ஆகியோர் திடீர் சோதனை செய்தனர். அப்போது சில கடைகளில் மீன்கள் கெடாமல் இருப்பதற்காக பார்மலின் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த 120 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் சில கடைகளில் வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட 3 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.