விவசாயியை தாக்கியவர் கைது
திருக்கோவிலூர் அருகே விவசாயியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே வடகரைதாழனூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 61) விவசாயி. சம்பவத்தன்று இவர் மணம்பூண்டி பி.டி.ஓ. அலுவலகம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது மணம்பூண்டியை சேர்ந்த அண்ணாமலை (41) என்பவர் சேகரை வழிமறித்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து சேகர் அளித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாமலையை கைது செய்தனர்.