வலங்கைமான் பிடாரி அம்மன் கோவில் தேர் திருவிழா
வலங்கைமான் பிடாரி அம்மன் கோவில் தேர் திருவிழா
வலங்கைமான்:
வலங்கைமான் கீழத்தெருவில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 19-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் தினமும் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழா நேற்று நடைபெற்றது. அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.