விழுப்புரம்,
விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திருவெண்ணெய்நல்லூர் காந்திக்குப்பத்தில் சாராயம் விற்பனை செய்த அதே கிராமத்தை சேர்ந்த ராஜா (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் எரிசாராயத்தை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (36) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 60 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.