ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பயணம்

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பயணம்

Update: 2022-04-27 18:04 GMT
ராமநாதபுரம்
இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், அரசியல் அமைப்பு சட்டத்தில் வேலைவாய்ப்பை அடிப்படை உரிமையாக்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரமாக சட்டம் இயற்ற வேண்டும், ஓய்வூதியம் பெறும் வயதை மீண்டும் 58 ஆக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சைக்கிள் பயணம் நடைபெறுகிறது. சென்னை, கன்னியாகுமரி, கோவை, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து சைக்கிள் பயணமாக திருச்சி நோக்கி செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் துணை பயணமாக ராமநாதபுரம் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ராமநாதபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி கோரிக்கைகளை வலியுறுத்தி சைக்கிள் பயணம் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தெட்சிணாமூர்த்தி, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் துரை நாராயணன் ஆகியோர் தலைமை தாங்கினர். சைக்கிள் பயணத்தினை முன்னாள் மாநில செயலாளர் திருவேட்டை தொடங்கி வைத்தார். இதில் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் மாரிமுத்து, சிவகங்கை மாவட்ட செயலாளர் ஜேம்ஸ்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்