ராமநாதபுரம்
ராமேசுவரம் துறைமுக பகுதியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கடந்த 9-ந் தேதி போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பாம்பன் புயல்காப்பகம் பகுதியை சேர்ந்த தஸ்மன் (வயது 28) என்பவரை பிடித்து சோதனையிட்டபோது அவரிடம் ரூ.1 கோடி மதிப்பிலான 925 கிராம் மெத்ஆம்பிட்டமின் என்ற உயர் ரக போதைப்பொருள் இருந்தது தெரிந்தது. இவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தங்கச்சிமடம் பொட்டேல் நகர் பகுதியை சேர்ந்த பிரைட்வின்(29), ஓலைக்குடா அருள் விக்னேஸ்வரன் (22) என்பவரையும் கைது செய்தனர். இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் ராமேசுவரம் பெரியபள்ளிவாசல் தெருவை சேர்ந்த சேதுபாண்டி (30) மற்றும் இலங்கையில் உள்ளதாக கூறப்படும் ராமேசுவரம் பத்ரகாளியம்மன்கோவில் தெருவை சேர்ந்த சேதுபதி ஆகியோரை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த சேதுபாண்டி நேற்று காலை ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண்.1 கோர்ட்டில் சரணடைந்தார். இவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி சிட்டிபாபு அடுத்த மாதம் 4-ந்தேதி வ