செஞ்சி,
செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி ஒரு டாராஸ் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, பள்ளியம்பட்டு கூட்டு ரோடு அருகே சென்றபோது சாலையோரம் நடந்து சென்ற 70 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் மீது மோதியது.
இதில், அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். அவர் யார்? எந்த ஊர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.