விக்கிரவாண்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சைக்கிள் பயணத்துக்கு வரவேற்பு
விக்கிரவாண்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சைக்கிள் பயணத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
விக்கிரவாண்டி,
மத்திய, மாநில அரசுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பகோரியும், குறைந்த பட்ச ஊதியமாக ரூபாய் 21 ஆயிரம் வழங்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு மாநில செயலாளர் பாலா தலைமையில் சைக்கிள் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள், நேற்று விக்கிரவாண்டிக்கு வந்தனர்.
அங்கு அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாநில செயலாளர் பாலா, மாநில துணைத்தலைவர் கார்த்தீஷ்குமார், மாவட்ட செயலாளர் அறிவழகன், மாவட்ட தலைவர் பிரகாஷ், மாவட்ட பொருளாளர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
முன்னதாக திண்டிவனத்துக்கு மாநில செயலாளர் பாலா தலைமையில் வந்த இளைஞர்களுக்கு ஓங்கூர், ஒலக்கூர் கூட்டு பாதை, சாரம், பட்டணம், திண்டிவனம் ஆகிய பகுதிகளில் விழுப்புரம் மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் மாவட்ட செயலாளர் அறிவழகன், மாவட்ட பொருளாளர் பார்த்திபன், மாவட்ட குழு உறுப்பினர் சதீஷ்குமார், திண்டிவனம் வட்ட செயலாளர் ராமதாஸ்,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பட்டணம் கிராம பகுதியில் கொடி ஏற்றப்பட்டது. முடிவில் திண்டிவனம் பகுதித் தலைவர் முருகன் நன்றி கூறினார்