15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு நேற்று மாலை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வாசுதேவமுருகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் நீலமேகன் அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க டெல்டா மண்டல தலைவர் கவிச்செல்வன் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஊராட்சியில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சி மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும்,
தூய்மை காவலர்களுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.10 ஆயிரத்தை ஊராட்சி மூலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் ஆதிசங்கர், இணை செயலாளர்கள் முனியாண்டி, நேரு, வெங்கடேசன், ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்க நிர்வாகிகள் ஜீவரத்தினம், ரங்கநாதன், ஆரோக்கியதாஸ், ஆனந்தகுமார், இளவழகன், சலேத்மேரி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் அனந்தராமன் நன்றி கூறினார்.