மளிகைக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி மளிகைக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2022-04-27 17:42 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின்பேரில்  மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி சுகந்தன் தலைமையில் கள்ளக்குறிச்சி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சின்னசேலம் அன்புபழனி, திருக்கோவிலூர் பிரசாத், விக்கிரவாண்டி இளங்கோவன் ஆகியோர் கொண்ட குழுவினர் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகள், மளிகைக்கடைகள், பல்பொருள் அங்காடி, மாட்டு இறைச்சி வருவல் கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு பெட்டிக்கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் மளிகை கடை ஒன்றில் காலாவதியான 10 கிலோ கலர் வத்தலை பறிமுதல் செய்தனர். இது தவிர மாட்டு இறைச்சி வருவல் கடையில் சுகாதாரமான முறையில் இறைச்சி விற்பனை செய்யப்படவில்லை என்பது தெரிந்தது. இதையடுத்து உரிமையாளருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.

மேலும் செய்திகள்