மாணவியிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு

மாணவியிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-04-27 17:40 GMT

திண்டிவனம் 

திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இவர்  சென்னை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரை திண்டிவனம் அடுத்த பெரம்பூரை சேர்ந்த பாரதிராஜா மகன் விஜய் (வயது 23) என்பவர் 1 வருடமாக காதலித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி,தனது வீட்டில் வைத்து விஜய் உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பின்னர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விஜய்யிடம் அவர் கேட்டார். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து உறவினர்களுடன் சேர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார். 

இதுகுறித்து மாணவி திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விஜய், மற்றும் நவநீதம், பாரதிராஜா, பாக்கியராஜ், ரகுபதி, செந்தில்நாதன், ஞானவேல், தாமரைச்செல்வி, செல்ல காந்தி, நீலாவதி  ஆகியோர் மீது புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்