மின்சாரம் தாக்கி குரங்கு பலியான குரங்கிற்கு பொதுமக்கள் அஞ்சலி

ஜவ்வாதுமலை பகுதியில் மின்சாரம் தாக்கி குரங்கு பலியான குரங்கிற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2022-04-27 17:13 GMT
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள நாயக்கனூர் கிராமத்தில் குரங்கு ஒன்று ஒரு வீட்டின் மீது இருந்து தாவிச் செல்லும்போது, இடையில் இருந்த மின்கம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து பலியானது.

இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வந்து, பாடைக்கட்டி, மாலை அணிவித்து, மேளம் அடித்தும், பட்டாசு வெடித்தும் ஊர்வலமாகச்  கொண்டு சென்று இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர்.

மேலும் செய்திகள்