மாட்டுடன் தகாத உறவு; ஜார்க்கண்ட்டை சேர்ந்த ஓட்டல் ஊழியர் கைது

மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட ஜார்க்கண்ட்டை சேர்ந்த ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார்;

Update: 2022-04-27 17:00 GMT
பெங்களூரு: ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கிஷான். இவர் பெங்களூரு மகாதேவபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹூடியில் உள்ள ஓட்டலில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். ஆனால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் வேலையை விட்டு நின்று விட்டார். இந்த நிலையில் ஓட்டல் அருகே உள்ள கூடாரத்திற்கு சென்ற கிஷான் அங்கு நின்று கொண்டு இருந்த ஒரு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனை ஓட்டல் அருகே உள்ள தங்கும் விடுதியில் தங்கி உள்ள இளம்பெண்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து இளம்பெண்கள், ஓட்டல் உரிமையாளர் விவேக்கிடம் கூறினர். உடனடியாக அவர் மகாதேவபுரா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் கிஷானை கைது செய்தனர். கிஷான் மீது இயற்கைக்கு மாறான உறவு என்ற சட்டத்தின் கீழ் மகாதேவபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்