ஓசூர்:
பாகலூர் அருகே உள்ள பி.தட்டனப்பள்ளியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 35). வேன் டிரைவர். சம்பவத்தன்று இவர் வேனை ஓட்டி கொண்டு பி.தட்டனப்பள்ளி பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது சிலர் சாலையில் அமர்ந்திருந்தனர். இதுகுறித்து மாதேஷ் கேட்டபோது, அவர்கள் ஆத்திரமடைந்து மாதேஷ் மற்றும் இவருடன் சென்ற மூர்த்தி ஆகியோரை தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் பாகலூர் போலீசார் கர்நாடக மாநிலம் ஆலம்பாடியை சேர்ந்த ஆனந்த் (26), புனுகன்தொட்டியை சேர்ந்த அஜித்குமார் (20) மற்றும் 18 வயதுடைய சிறுவனை கைது செய்தனர்.