தர்மபுரியில் விபத்து ஏற்படுத்திய 15 வாகனங்களுக்கு அபராதம்
தர்மபுரியில் விபத்து ஏற்படுத்திய 15 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி டவுன் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு விபத்துக்களில் சிக்கிய வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முறையாக காப்பீடு, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டியபோது விபத்து ஏற்படுத்திய 15 வாகனங்களுக்கு ரூ.18 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த ஆய்வின் போது விபத்துக்களை தவிர்க்க சாலைகளில் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும். மிக அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டக்கூடாது. வாகனங்களை ஓட்டும்போது சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினார்.