ஓசூர்:
ஓசூர் அட்கோ போலீசார் பாகலூர் சாலையில் ஒரு கடையில் சோதனை செய்தனர். அந்த கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.72 ஆயிரத்து 700 மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குட்காவை பதுக்கி வைத்து விற்றதாக கே.சி.சி. நகரை சேர்ந்த பிரவீத் ஜனா (வயது 45), இந்திரஜித் (23) ஆகியோரை கைது செய்தனர். சிங்காரப்பேட்டை போலீசார் அத்திப்பாடி, எலவம்பாடி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கடைகளில் குட்கா விற்ற ரகு (47), ஜெயராமன் (45) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.