போச்சம்பள்ளியில் காய்கறிகள் பதப்படுத்தும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

போச்சம்பள்ளியில் காய்கறிகள் பதப்படுத்தும் மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.;

Update: 2022-04-27 16:57 GMT
மத்தூர்:
போச்சம்பள்ளியில் வேளாண் வணிகத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள காய்கறிகள் பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி மையத்திலும், திம்மாபுரம் அரசு தோட்டக்கலை பண்ணையில் மா உற்பத்தி மற்றும் பழ செடிகள் உற்பத்தி மையத்தையும் கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
போச்சம்பள்ளியில் காய்கறி பதப்படுத்தும் மையத்தில் தற்போது தேங்காய் நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 மெட்ரிக் டன் வீதம் மதிப்பு கூட்டி பதப்படுத்தப்படுகிறது. இதுவரை மொத்தம் 55 மெட்ரிக் டன் அளவு தேங்காய்கள் பதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டான்ஹோடா விற்பனையகம் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான ஜாம், ஜெல்லி, ஊறுகாய், பழரசம், தேங்காய், காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். 
ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, வேளாண் வணிக துணை இயக்குனர் கணேசன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சரவணன், வேளாண் அலுவலர் அருள்தாஸ், தோட்டக்கலை உதவி அலுவலர் சுகதேவ் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்