தினத்தந்தி புகார் பெட்டி

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

Update: 2022-04-27 16:51 GMT
குடிநீர் வசதி வேண்டும்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம்  வாழ்மங்கலம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் போதிய குடிநீர் வசதி இல்லை. இதனால் பெண்கள்,குழந்தைகள் மற்றும் மாணவ-மாணவிகள் குடிநீரின்றி மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் குடிநீருக்காக பொதுமக்கள் நீண்ட தூரம் இருசக்கர வாகனங்களில் சென்று குடங்களில் தண்ணீர் பிடித்து வருகின்ற சூழல் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
- பொதுமக்கள், வாழ்மங்கலம்.
குண்டும், குழியுமான சாலை
திருவாரூர் மாவட்டம் மாங்குடியில் இருந்து, நாகை மாவட்டம் சிகார் ஆந்தகுடிக்கு செல்லும் சாலை உள்ளது. ஆற்றங்கரை வழியாக செல்லும் இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளது.  குறிப்பாக சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் குண்டும், குழியுமான சாலையினால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- ரஜினிபிரசாத், ஆந்தக்குடி.
புதிய தார் சாலை அமைக்கப்படுமா?
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா கோட்டூர் ஒன்றியத்தில் மீனம்பநல்லூர்-நெய்குன்னம் மற்றும் நல்லநாயகிபுரம் செல்லும் சாலை உள்ளது. சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் குண்டும் குழியுமாக உள்ளது.  குறிப்பாக சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் குண்டும், குழியுமான சாலையினால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-நிகா, மீனம்பநல்லூர்.


மேலும் செய்திகள்