70 அடி ஆழ கிணற்றில் விழுந்த நாய்
போடியில் 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த நாய் மீட்கப்பட்டது.
போடி:
போடி தேவர் காலனியை சேர்ந்தவர் பரமன். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் கிணறு உள்ளது. சுமார் 70 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் குறைந்த அளவு தண்ணீர் உள்ளது.
இந்தநிலையில் அந்த கிணற்றில் நேற்று மாலை நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதனை கேட்ட பரமன் கிணற்றுக்குள் எட்டி பார்த்தார். அப்போது கிணற்றுக்குள் நாய் ஒன்று விழுந்து கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள், கிணற்றில் விழுந்த நாயை கூடைவலை மூலம் மீட்டனர். பின்னர் அந்த நாய்க்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.