விடுதி துப்புரவு பணியாளர்கள் உண்ணாவிரதம்

கள்ளக்குறிச்சியில் விடுதி துப்புரவு பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-27 16:45 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி மற்றும் விடுதி துப்புரவு பணியாளர்கள் மாநில ஒருங்கிணைப்புகுழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு மாநில தலைவர் காந்தி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் முருகேசன், மாவட்ட செயலாளர் இளவரசன், மாவட்ட பொருளாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் செல்வம் வரவேற்றார்.  அரசு அனைத்து அடிப்படை சி மற்றும் டி கிரேடு அரசுபணியாளர்களுக்கு வழங்கும் காலமுறை ஊதியத்தை போல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி மற்றும் விடுதி துப்புவு பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் பணியாளர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பெயர் விடுபட்ட பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. .இதில் காப்பாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி சந்திரசேகர், அடிப்படை பணியாளர்கள் மாநில தலைவர் தனவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்