போடி அருகே டாஸ்மாக் கடையில் தீ
போடி அருகே டாஸ்மாக் கடையில் தீவிபத்து ஏற்பட்டது.;
போடி:
போடி அருகே மேலச்சொக்கநாதபுரத்தில், பேரூராட்சி அலுவலக சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் நேற்று காலை 7 மணி அளவில் திடீரென்று கரும்புகை வெளியேறியது.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள், டாஸ்மாக் கடையில் எரிந்த தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் கடையில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் நாசமானது. மேலும் அங்கிருந்த பொருட்களும் எரிந்தது. மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் முருகன் அளித்த புகாரின்பேரில் போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.