மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு

தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-04-27 16:23 GMT
கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் அருகே பேரால் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜ் மனைவி நீலாம்பூ (வயது 60). இவர் சம்பவத்தன்று சித்தால் - சாத்தப்புத்தூர் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நீலாம்பூ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்