கார் மோதி தொழிலாளி பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2022-04-27 16:21 GMT
குள்ளனம்பட்டி:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36). கட்டிடத்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சூர்யா (21). இவர்கள் 2 பேரும் திருப்பூருக்கு வேலை நிமித்தமாக சென்றனர். 

பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் இவர்கள், பெரியகுளம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் சென்று கொண்டிருந்தனர். பித்தளைப்பட்டி பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் சென்றது. 

அப்போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது நேருக்குநேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுரேஷ் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சுேரஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

மோட்டார் சைக்கிளில் சென்ற சூர்யா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்