மது குடித்த தி.மு.க. நிர்வாகி மயங்கி விழுந்து சாவு

மது குடித்த தி.மு.க. நிர்வாகி மயங்கி விழுந்து சாவு

Update: 2022-04-27 14:54 GMT
மது குடித்த தி.மு.க. நிர்வாகி மயங்கி விழுந்து சாவு
பேரூர்
கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 53). தி.மு.க. நிர்வாகி. நேற்று முன்தினம் இவரும், அதே பகுதியை சேர்ந்த வார்டு செயலாளர் சிவாவும் பேரூர் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் பாருக்கு சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் தனி அறையில் அமர்ந்து மது குடித்தனர். சிறிது நேரத்தில் சண்முகத்திற்கு தலைசுற்றல் ஏற்பட்டு அப்படியே மயங்கி கீழே விழுந்தார். சிவாவுக்கும் வாந்தி ஏற்பட்டது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக உயிரிழந்தார். சிவா சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். சண்முகம் உயிரிழந்ததற்கு அளவுக்கு அதிகமாக மது குடித்தது காரணமா? அல்லது மதுவில் கலந்து குடித்த தண்ணீர் காரணமா? என்பது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்