கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி சாவு

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி சாவு;

Update: 2022-04-27 14:50 GMT
கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி சாவு
சிங்காநல்லூர்

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பச்சன் மண்டல் (வயது49). தொழிலாளி. இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் சிங்காநல்லூர் அருகே உள்ள எஸ்.எச்.எஸ்.காலனி பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் 10 அடி உயரத்தில்  இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. 

உடனே அவரை  சக தொழிலாளர்கள் செய்தவர்கள்  மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், பச்சன் மண்டல் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்