திருச்செந்தூரில் தொழிலாளி வீட்டை சேதப்படுத்திய 3 பேர் கைது

திருச்செந்தூரில் தொழிலாளி வீட்டை சேதப்படுத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-27 13:57 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கரம்பவிளை ஜெ.ஜெ. நகரை சேர்ந்த புலமாடன் மகன் அற்புதராஜ் (வயது 40). கூலி தொழிலாளியான இவரிடம், நேற்று முன்தினம் தோப்பூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த சிவபெருமாள் என்பவர் தோப்பூரில் அம்பேத்கர் சிலை வைப்பதற்காக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அற்புதராஜ், தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதையடுத்து சிவபெருமாள், அற்புதராஜை அவதூறாக பேசி சத்தம் போட்டு விட்டு சென்று விட்டார். பின்னர் அன்று இரவு 11.30 மணியளவில், சிவபெருமாள் மற்றும் தோப்பூரை சேர்ந்த சிவா, முத்துக்குமார், நாகமணி ஆகியோர் அற்புதராஜின் வீட்டுக்கு அரிவாளுடன் வந்துள்ளனர். பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அற்புதராஜ், அவரது மனைவி, குழந்தைகளை கொலை செய்ய முயன்றுள்ளனர். பதறிப்பேன அற்புதராஜ் குடும்பத்தினர் அவர்களிடம் இருந்து தப்பி வெளியே ஓடிவிட்டனர். பின்னர் வீட்டில் இருந்த டி.வி, பாத்திரங்கள், இரும்பு கட்டில் உள்ளிட்ட பொருட்களையும், வீட்டின் வெளியே நின்ற ஆட்டோவையும் உடைத்து விட்டு அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அற்புதராஜ் கொடுத்த புகாரின் பேரில் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவபெருமாள், முத்துக்குமார், நாகமணி ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிவாவை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்