அக்னீஸ்வரர் கோவிலில் அப்பர் ஐக்கிய விழா
திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவிலில் அப்பர் ஐக்கிய விழா நடந்தது.
திட்டச்சேரி:-
திருமருகல் அருகே திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனத்துக்கு சொந்தமான அக்னீஸ்வரர் கோவிலில் அப்பர் ஐக்கிய விழா நடந்தது. விழாவுக்கு வேளாக்குறிச்சி ஆதீனம் தலைமை தாங்கினார். இதில் ்திருப்புகலூா் தலவரலாறு நூலினை வேளாக்குறிச்சி ஆதீனம் வெளியிட கும்பகோணம் கோர்ட்டு தலைமை நீதித்துறை நடுவர் பிரகாஷ் பெற்றுக்கொண்டார். இதில் சூரியனார் கோவில் ஆதீனம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு உழவாரப்பணி, அரம்பையர் நடனம், மகாஅபிஷேகம், புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.