தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் புதன்கிழமை மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-04-27 13:28 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் புதன்கிழமை மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று மாலை சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கற்குவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் அ.கருப்பசாமி, கசாலி மரைக்காயர், அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைத்தலைவர் குருராஜ் வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர்கள் வேல்முருகன், சங்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில் கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை காலமுறை ஊதியக்கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் நிலையிலான பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும், கொரோனா பேரிடரில் பணியாற்றிய அனைத்து நிலை ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்