குலசேகரன்பட்டினம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

குலசேகரன்பட்டினம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-04-27 13:21 GMT
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் உடன்குடியில் இருந்து செட்டியாபத்து செல்லும் சாலையில் ரோந்து சென்றனர். கூழையன்குண்டு விலக்கில் உள்ள ஒரு ஓட்டல் பின்புறம் 2 வாலிபர்கள் கஞ்சா விற்று கொண்டிருந்தது தெரிய வந்தது. போலீசார் அந்த பகுதியை சுற்றிவளைத்தபோது, 2 வாலிபர்களும் தப்பி ஓடினர். இதில் ஒரு வாலிபரை போலீசார் துரத்தி சென்று பிடித்தனர். மற்றொரு வாலிபர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்திபோது, அவர் செட்டியாபத்து அருணாசலபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த கலியன் மகன் சிவச்சந்திரன் (வயது 23) என்றும், தப்பி ஓடிய வாலிபர் தேரியூர் ஜெயபாண்டி மகன் சரத்குமார் (28) என்றும் தெரிய வந்தது. இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவச்சந்திரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 570 கிராம் எடை கொண்ட 61 பாக்கெட்டுகளில் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய சரத்குமாரை போலீசார் தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்