பந்தலூர் அருகே தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

பந்தலூர் அருகே தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-27 12:39 GMT
பந்தலூர்

பந்தலூர் தாலுகா அம்பலமூலா அருகே மதுவந்தால் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 60). விவசாயி. உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட இவர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அவர் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் அம்பலமூலா போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் மற்றும் போலீசார் அங்கு சென்று, பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்