கூடலூர் அரசு கலைக் கல்லூரியில் ரத்த தான முகாம்
கூடலூர் அரசு கலைக் கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது.
கூடலூர்
கூடலூர் ஆமைக்குளம் அரசு கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ரெட் கிராஸ் துணைத் தலைவர் கோபால் முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரியில் நுண்ணுயிரியல் துறைத்தலைவர் டாக்டர் சண்முகம், ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் மோரிஸ் சாந்தா குரூஸ் ஆகியோர் பேசினர். முன்னதாக விரிவுரையாளர் செல்வகுமார் வரவேற்றார். முகாமில் 30 மாணவ- மாணவிகள் ரத்த தானம் வழங்கினர். முகாமில் பேராசிரியர்கள் ஜனனி, சுரேஷ் குமார் உள்பட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பொற்கோ நன்றி கூறினார்.