பந்தலூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
பந்தலூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
பந்தலூர்
பந்தலூர் அருகே சேரம்பாடி சுங்கம் கடைகளில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியன் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை விற்றதாக கடை உரிமையாளர் சந்திரபோஸ் (வயது 42) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 525 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.