கோவில்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது

கோவில்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-27 11:55 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி- கடலையூர் ரோட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி தலைமையில்  போலீசார் கடலையூர் ரோட்டில் தங்கப்ப நாடார் காலனியை சேர்ந்த மாரியப்பன் மகன் சந்திரன் (வயது 61) என்பவர் நடத்தி வரும் குளிர்பானக்கடையில் சோதனை நடத்தினா். கடையில் அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை கைபபற்றியதுடன், அவரிடம் இருந்த ரூ. 51 ஆயிரத்தி 140-ஐயும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்