கே.சி.வீரமணி சொத்து குவிப்பு வழக்கில் சாட்சிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சொத்து குவிப்பு வழக்கில் சாட்சிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தினர்.;

Update: 2022-04-27 11:48 GMT
வாணியம்பாடி

கடந்த 2016-2021 அ.தி.மு.க. ஆட்சியில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. அப்போது இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 21-ந்் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீடு உள்பட திருப்பத்தூர், ஓசூர், திருவண்ணாமலை, ஏலகிரி மலை உள்ளிட்ட 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில்  வாணியம்பாடி பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் சேலம் கோட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணைபோலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்