தூத்துக்குடியில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைபொருட்கள் விற்பனைைய தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைபொருட்கள் விற்பனைைய தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறை சார்பில் பொதுமக்களிடம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாற்றத்தை தேடி என்னும் சமூக விழிப்புணர்வு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காலை தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலைய வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சமூக மாற்றம்
இளைஞர்கள் புரிதல் இல்லாமல் செய்யும் சில செயல்கள் அவர்களின் வாழ்க்கையை மாற்றி விடுகிறது. இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டி இல்லாத நிலையில் தடம் மாறி செல்கின்றனர். ஆகையால் நல்ல வழிகாட்டுதல் இருந்தால் சமூக மாற்றம் நிகழும் என்பது என்னுடைய எண்ணம்.
அந்த வகையில் இந்த மாற்றத்தை தேடி என்னும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியை கொண்டு வந்து உள்ளோம். ஒவ்வொரு குற்றங்களாலும் மக்கள் எப்படி பாதிக்கப்படுகின்றனர், அதனை செய்பவர் எந்தவிதமான பாதிப்புகளை சந்திக்கிறார் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
போதை பொருட்கள்
குற்ற சம்பவங்களின் பின்னணியில் போதை பொருள் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. போதைக்கு அடிமையான குற்றவாளிகள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு செயல்களில் துணிச்சலாக ஈடுபடுகின்றனர். போதை பொருளை பயன்படுத்துபவர்கள் குறுகிய காலத்தில் இளமையை இழந்து இல்லற வாழ்க்கைக்க தகுதியற்றவர்களாகி விடுகின்றனர். எனவே போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த, போதை பொருட்கள் குறித்து தகவல் அறிந்தால் மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம். இதில் ெபாதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை
பெண்கள், குழந்தைகளுக்கு பொது இடங்களில் உரிய மரியாதை அளிக்க வேண்டும். 18 வயது நிரம்பாத சிறுமிகள் மீது இழைக்கப்பம் குற்றங்கள், போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உரியதாகும். பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி, அவர்களை மிரட்டுவது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும். அவ்வாறு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினால் 3 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும். மேலும் தற்கொலை எண்ணம் தோன்றுவதற்கு செரட்டோனின் என்ற ஹார்மோன் சரியாக சுரக்காததே காரணம். இது தொடர்பாக உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கொரோனாவில் இறந்தவர்களை விட சாலை விபத்துக்களில் அதிகம் பேர் இறந்து வருகின்றனர். ஆகையால் முறையாக சாலைவிதிகளை கடைபிடித்து, சாலைகளில் நிதானமாக செயல்படும் போது விபத்துக்களை தவிர்க்கலாம். ஏதேனும் பிரச்சினைகள், முன்விரோதம் ஏற்படும் போது, அதனை பொறுமையாக கையாண்டு சம்பந்தப்பட்ட துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்க்க வேண்டும். இதனை விடுத்து வன்முறையில் ஈடுபடக்கூடாது.
மனம் திருந்தினால் உதவி
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து குற்றவாளிகளின் நடவடிக்கைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மனம் திருந்தி நல்வாழ்வு வாழத்துடிக்கும் குற்றவாளிகளுக்கு உரிய உதவிகள் அனைத்தும் போலீஸ் துறை சார்பில் செய்யப்படும். அதே நேரத்தில் திருந்தாமல் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஆன்லைன் மூலமான பணபரிவர்த்தனைகளை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உறுதிமொழி ஏற்பு
தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் சமூக விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி துணை பொது மேலாளர் சுந்தரேஷ்குமார், உதவி பொது மேலாளர் அருண்மொழியன் தூத்துக்குடி நகர வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகபெருமாள், வெங்கடேஷ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.