16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: ‘போக்சோ' சட்டத்தில் தந்தை-மகன் கைது
திருமணம் ஆசை காட்டி 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த வாலிபரின் தந்தையை ‘போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை என்று அவரது பெற்றோர் ஐஸ் அவுஸ் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுமி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த சந்தோஷ் (19) என்ற வாலிபருடன் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஐஸ் அவுஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் வேலூர் சென்று சிறுமியை மீட்டனர். காதல், திருமணம் ஆசை காட்டி சிறுமியை சந்தோஷ் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரிய வந்தது.
இந்த விவகாரத்தில் சந்தோஷை அவரது தந்தை சம்பத் (50) கண்டிக்காமல் அவருக்கு ஆதரவாக இருந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. ‘போக்சோ' சட்டத்தின் கீழ் தந்தை-மகனான சந்தோஷ், சம்பத் கைது செய்யப்பட்டனர்.