விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-04-26 21:27 GMT
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தத்தனூர் சமத்துவபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன்(வயது 62), வடகடல் கிராமத்தை சேர்ந்த கலைவாணி(40) ஆகியோர் அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் விக்கிரமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் பெருமாள் தீயனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்றதாக கிடைத்த ரகசிய தகவலின்படி பெருமாள் தீயனூர் தெற்கு தெருவை சேர்ந்த நாராயணசாமி(43) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நாராயணசாமியை கைது  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்