போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

Update: 2022-04-26 21:27 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வாசகர் வட்ட தலைவர் வினோத் தலைமை தாங்கினார். நூலகர் சித்ரா வரவேற்றார். விழாவில் வேப்பந்தட்டை ஊராட்சி தலைவர் தனலட்சுமி கலியமூர்த்தி கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் புதிய புரவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதில் வாசகர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் புரவலர் மணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்