மணல் கடத்தல் வழக்கில் தேடப்பட்டவர் கைது

மணல் கடத்தல் வழக்கில் தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-04-26 21:19 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தென்கச்சிபெருமாள்நத்தம் கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார், தனது உதவியாளருடன் கடந்த ஆண்டு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது கீழகுடிகாடு கொள்ளிடக்கரை பகுதியில் மாட்டு வண்டியில் பொற்பொதிந்தநல்லூரை சேர்ந்த தேவேந்திரன்(வயது 50) மணல் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மாட்டு வண்டியை கிராம நிர்வாக அலுவலர் தடுத்து நிறுத்தியபோது, வண்டியை விட்டுவிட்டு மாடுகளை அவிழ்த்துக்கொண்டு தேவேந்திரன் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின்பேரில் தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவேந்திரனை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று தேவேந்திரனை தா.பழூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் செய்திகள்