மதுபான விடுதி ஊழியர்களை தாக்கிய 3 பேர் கைது

பெலகாவி அருகே மதுபான விடுதி ஊழியர்களை தாக்கிய 3 பேர் கைது செய்தனர்.

Update: 2022-04-26 21:17 GMT
பெலகாவி:

  பெலகாவி மாவட்டம் பைலஒங்கலா டவுனில் ஒரு மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான விடுதியில் கடந்த 24-ந் தேதி 6 பேர் மதுகுடித்து கொண்டு இருந்தனர். அப்போது ஒருவர் மேஜை மீது கால் வைத்து மதுகுடித்ததாக தெரிகிறது. இதற்கு மதுபான விடுதி ஊழியர், காசாளர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 

இதனால் ஆத்திரம் அடைந்த 6 பேரும் மதுபான விடுதி ஊழியர்கள், காசாளரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் பைலஒங்கலா போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகு, ராஜூ, விட்டல் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்