45 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கடந்த 4 மாதங்களில் 45 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம்:-
சேலம் மாவட்டத்தில் அடிக்கடி வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவின் படி இந்த ஆண்டில் இதுவரை 4 மாதங்களில் 38 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்து உள்ளது. அதே போன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் பரிந்துரையின் பேரில் 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி மாவட்டம் முழுவதும் இதுவரை 45 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.