மலைக்கோட்டை, ஏப்.27-
திருச்சி தெப்பக்குளம் வாணபட்டரை தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா கடந்த 10-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவின் சிகர நிகழ்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தேர் வாணபட்டரை தெரு, வடக்கு ஆண்டாள் தெரு, கீழ ஆண்டாள் தெரு, சின்ன கடைவீதி, என்.எஸ்.பி.ரோடு வழியாக இரவு 8.30 மணிக்கு மேல் மீண்டும் கோவில் வந்தடைந்தது. பின்னர் அம்மன் தேரில் இருந்து இறக்கப்பட்டு கோவில் சென்றடைந்தார். இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று (புதன்கிழமை) மாலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், நாளை அம்மனுக்கு முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து, அடுத்த நாள் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து, ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. மாலை சந்தன காப்பு அலங்காரம் நடைபெறுகிறது. அதைதொடர்ந்து மே 1-ந் தேதி பகல் 12 மணிக்கு ஆற்றுக்கு வேல் புறப்படுதல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மேல் சப்பாணி கருப்பு குதிரை வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அன்று நள்ளிரவு 12 மணிக்கு குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து 2-ந்் தேதி காலை 10 மணிக்கு மேல் பெரிய பூஜை நிகழ்ச்சியும், 12 மணிக்கு மகா அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.