கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-04-26 19:59 GMT
கரூர், 
கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார் வந்தன. அதன்பேரில் கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மடவிளாகம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அஜித்குமார் (வயது 24) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்