முன்னாள் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
முன்னாள் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கமுதி
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையிலேயே எந்த ஒரு சமூகத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும், உச்சநீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான பழைய 20 சதவீத இட ஒதுக்கீடு முறையை தொடர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கமுதி பஸ் நிலையம் அருகே தேவர்சிலை எதிரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் மூக்கூரான் தலைமை தாங்கினார். செயலாளர் முத்துராமலிங்கம், மறவர் இன அறக்கட்டளை தலைவர் செல்ல தேவர், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் மாநில செயலாளர் முத்துராமலிங்கம், மூவேந்தர் முன்னேற்ற சங்க தலைவர் கீரந்தை வீரப்பெருமாள், மூவேந்தர் பண்பாட்டு கழகம் தலைவர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சங்கத்தின் இணைச் செயலாளர் வக்கீல் ஆறுமுகம் வரவேற்றார். கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்க பொருளாளர் கோட்டைஇளங்கோவன் நன்றி கூறினார்.