தொண்டி,
திருவாடானை தாலுகா ஆழிகுடி கிராமத்தில் தாசில்தார் செந்தில் வேல்முருகன், தொண்டி வருவாய் ஆய்வாளர் குமார், கிராம நிர்வாக அலுவலர் ராமநாதன், கிராம உதவியாளர்கள் மகாலிங்கம், சிவகுமார் ஆகியோர் மணல் திருட்டு தடுப்பு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
அப்போது கொட்டகுடி, அ.மணக்குடி சாலையை ஒட்டிய ஓடை பகுதியில் சுமார் 55 மணல் மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து மணல் மூடைகளை கைப்பற்றிய வருவாய் துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
இதில் அரசு அனுமதியின்றி மணலை சாக்கு மூடைகளில் கட்டி கடத்திச் செல்வதற்காக வைக்கப்பட்டிருந்ததாக வருவாய் துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.