இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பேரணி

விருதுநகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பேரணி நடத்தினர்.

Update: 2022-04-26 19:34 GMT
விருதுநகர், 
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குமரி மாவட்டம் கொல்லங்கோட்டிலிருந்து திருச்சி வரை படித்த இளைஞர்களுக்கு வேலை வேண்டும். நகர்ப்புறங்களிலும் வேலை உறுதித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சைக்கிள் பேரணி மேற்கொண்டுள்ளனர். விருதுநகர் வந்த சைக்கிள் பேரணியினரை ஜனநாயக வாலிபர் சங்க நகர தலைவர் தீபக்குமார், மாவட்ட தலைவர் ஜெயபாரத் ஆகியோர் வரவேற்றனர். மாநிலத்தலைவர் ரெஜிஸ்மார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாதர் சங்க மாவட்டதலைவர் உமாமகேஸ்வரி, ராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்